in

காங்கிரஸ் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளிடையே கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி பாஜகவில் உள்ள சிறு, சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றிபெறுவோம் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார் மேலும் காங்கிரஸ் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளிடையே கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜகவின் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநில கட்சித்தலைவர் செல்வகணபதி எம்.பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஹிந்து விரோத பேச்சுக்கு எதிதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதேபோல் 3-முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு பாராட்டு தெரிவித்தும்,
புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது வரை அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என தெரிவித்த அவர் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பொய் பிரச்சாரத்தை செய்ததன் காரணமாக பாஜக சரிவை சந்தித்தது என்றார் மேலும் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய புதுச்சேரி மாநிலத்தில் சனாதானத்தை வேறுக்க வேண்டும் என காங்கிரஸ் & திமுக கூறியதை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் காங்கிரஸ், திமுகாவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல்கள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி காங்கிரஸ் கட்சி இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக நிர்வாகிகள் 2026 தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கட்சிக்குள் சிறு, சிறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்பது தலைமைக்கு தெரியும் எனவும் பிரச்சினைகள் கலைந்து அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வரும் 2026 ஆம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றார் மேலும் மத்திய அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

What do you think?

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் புதுச்சேரியில் கோலாகளமாக கொண்டாட்டம்

காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் டிராமா ஆடுகிறார்கள் என மேலிட பொறுப்பாளர் சுரானா விமர்சனம்