in

காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் டிராமா ஆடுகிறார்கள் என மேலிட பொறுப்பாளர் சுரானா விமர்சனம்

புதுச்சேரியை ஆளும் ரங்கசாமி அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது

சிவன் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் டிராமா ஆடுகிறார்கள் என மேலிட பொறுப்பாளர் சுரானா விமர்சனம்

புதுச்சேரி பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட நமச்சிவாயம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கதிடம் படுதோல்வி அடைந்தார்.
இந்த தோல்வி புதுச்சேரி பாஜக மற்றும் ஆளும் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை மையமாக வைத்து பல்வேறு அரசியல் சூழ்நிலை புதுச்சேரியில் அரங்கேறி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆளும் அரசுக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்ட், மற்றும் ஆதரவு எம்.எல். ஏ-க்கள் சிவசங்கரன், அங்காளன், கொல்லப்பள்ளி அசோக், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள்.

சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும், வாரிய தலைவர் பதவிகளை நிரப்பிட வேண்டும், தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்து இவர்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இது ரங்கசாமியின் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாஜகவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்த மேலிட பொறுப்பாளர் சுரானா சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை கட்சி மேல் இடத்தில் பேசி பத்து தினங்களுக்குள் முடிவுக்கு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி பாஜகவின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது. தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ள செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மேலிட பொறுப்பாளர் சுரானா மாநில தலைவர் செல்வகணபதி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வியின் காரணங்களை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பேசப்பட உள்ளது.

மேலும் ஆளும் அரசுக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் கூடிய உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய மேலிட பொறுப்பாளர் சுரானா..

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு பாகிஸ்தான் போன்ற நாடுகள் அஞ்சி வருகிறது அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகளில் நாடு அபரித வளர்ச்சி அடைய உள்ளது என்று தெரிவித்த சுரானா, குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஏதோ சாதித்து விட்டதாக குதிக்கிறார்கள் சிவன் படத்தை கையில் பிடிக்க தகுதி இல்லாதவர்கள் எல்லாம் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் டிராமா ஆடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

What do you think?

காங்கிரஸ் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டுமெனவும் நிர்வாகிகளிடையே கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பணாமணீஸ்வரர் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை விழா