ரங்கோலியில் காமராஜர் உருவப்படத்தை வரைந்த புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கடற்கரை சாலையில் 16 அடி அகலம் 24 அடி உயரத்தில் ரங்கோலியில் காமராஜர் உருவப்படத்தை வரைந்த புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர்.
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் துணை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் வினோத். சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த சில வருடங்களாக மெகா சைஸ் ரங்கோலி கோலம் வரைந்து அசத்தி வருகிறார். புதுச்சேரி காவல்துறையும் இவரை ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, காமராஜரை போற்றும் வகையிலும், அழிந்து வரும் ரங்கோலி கலையை மீட்டெடுக்கும் வகையிலும் 8 கிலோ கொண்ட ரங்கோலி மாவை பயன்படுத்தி 16 அடி அகலம், 24 அடி உயரத்தில் காமராஜர் உருவப்படத்தை கடற்கரை சாலையில் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் .
இதனை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து, ரசித்து அவரை பாராட்டினார்கள்.
தற்போது போலீஸ் அதிகாரி வினோத் வரைந்துள்ள ரங்கோலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.