in

பிரிட்டன் தமிழ் செய்திகள்- ஐரோப்பிய செய்திகள்

ஐரோப்பிய செய்திகள்

 

யூரோ 2024 இறுதிப் போட்டியில் தோல்வியுற்று தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்

யூரோ 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியுற்ற பிறகு இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் வீடு திரும்புகின்றனர்.

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த பெர்லினில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் இருந்து வெளியேறிய விமான நிலையத்திற்கு செல்லும் போது ரசிகர்கள் மற்றும் ஊழியர்களைப் அவர்களை கைஅசைத்து வழியனுப்பினர்.

கேப்டன் ஹாரி கேன் நீண்ட மௌனத்திற்கு பிறகு X தளத்தில் கூறியதாவது, “நாங்கள் கடினமாக உழைத்தும் எங்களால் வெற்றியை அடைய முடியவில்லை” என்று மனம் உடைந்து கூறினார்.

“இது ஒரு நீண்ட கடினமான போட்டியாகும், இறுதிப் போட்டி வரை வந்ததற்காக வீரர்களை என்னி பெருமை கொள்கிறேன்

“இறுதியில் நாங்கள் எங்கள் இலக்கை விட குறைவான் இன்னிங்கிஸ்யில் தவறவிட்டோம், தோல்வியை ஏற்று வாழ வேண்டும் மீண்டும் இங்கிலாந்து சட்டையுடன் விளையாடுவோம்.

“எங்களை நம்பி கடைசி வரை ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.” என்று பதிவிட்டார்.

இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer…ரை தொலை பேசியில் அழைத்த பிரதமர் நரேந்திர மோடி

இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer…ரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து இருநாட்டு இடையே உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் உறுதி செய்வதற்கும் .

கடந்த 14ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றதை அடுத்து தலைவர் பதவியேற்ற உடன் பல நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில்.

பிரதமர் மோடியும் தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்து பின் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேம்படுத்தவும் தடைகளற்ற வர்த்தகத்தை மேம்படுத்தவும் அதற்கான ஒப்பந்தத்தை விரைவில் உறுதி செய்ய உடன்படுக்கை ஏற்படுத்தப்படும் என்றும் மேலும் Sir Keir Starmer இந்தியா வரும் படி அழைப்பும் விடுத்திருக்கிறார். Keir …ரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நன்றி கூறினார்.

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: உண்மையை மறைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்

ஒரு குழப்பமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜூலை 13 அன்று பிரச்சார பேரணியில் நடந்தேறியது. துப்பாக்கி ஏந்திய ஒருவரின் படுகொலை முயற்சியில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காதில் அடிபட்டு அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று FBI அடையாளம் கண்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது. “உள்நாட்டு பயங்கரவாத” செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்தது FBI ஆனால் அவர் தனியாக செயல்பட்டதாகத் விசாரணையில் தெரிகிறது.

78 வயதான முன்னாள் ஜனாதிபதி, பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு முகத்தில் இரத்தம் வழிய மேடையில் இருந்து வெளியேறினார், அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் மற்றும் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவதிற்கு வருத்தம் தெரிவித்து x தளத்தில் ஜனாதிபதி ஜோ பிடேன் பதிவிட்டதாவது,”எனது நண்பரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன்” என்று X இல் பதிவிட்டுள்ளார்.

“இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறைக்கு அரசியலிலும் ஜனநாயகத்திலும் இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் உயர்த்தபட்ட காபி..யின் விலை

கருப்பு காபி, லட்டுகள் மற்றும் குளிர்பானங்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

சராசரியாக, அமெரிக்கா முழுவதும் காபி விலைகள் 2021 முதல் 2024 வரை தோராயமாக 23 சதவீதம் அதிகரித்துள்ளது – இது பணவீக்கத்தின் பக்க விளைவு. ஒரு காபியின் சராசரி விலை இப்போது $4.76 ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காபி இன் விலை $3.97
பெரிய நகரங்கலான நியூயார்க், பாஸ்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹூஸ்டன் நகரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ், டன்கின், பீட்ஸ் மற்றும் ப்ளூ பாட்டில் ஆகியவற்றில் விர்க்க படும் லட்டு, குளிர்பானம் மற்றும் வழக்கமான கருப்பு காபி ஆகியவற்றின் விலையை ஆய்வு செய்த போது.

பெரும்பாலான காபியின் விலை காபி பீன்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கபடுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் கறுப்பு காபிகளின் விலை மிகவும் அதிகரித்து உள்ளது.

ஒரு காலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் $2 முதல் $3 வரை இருந்த காஃபிகள் இப்போது $3.50 முதல் $4 வரை விற்கப்படுகிறது.துல்லியமாகச் சொல்ல வேண்டும் ஆனால் , ஒரு கப் காபி ..இக்கு இப்போது சராசரியாக $3.71 செலவழிக்க வேண்டும். இனி coffee..யை மறந்துற வேண்டியது தான்.

What do you think?

யூரோ 2024 இறுதிப் போட்டியில் தோல்வியுற்று தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்

தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்