in

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்பு

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினம் ஜூலை மாதம் 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

நூற்றுக்கு மேற்பட்ட செவிலிய மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணி தர்மபுரம் ஆதீன முகப்பு வளைவு வரை நடைபெற்றது பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படியும் கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.

What do you think?

மயிலாடுதுறை அருகே தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ந.கண்ணப்பன் நேரில் ஆய்வு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்