in

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாற்றுத்திறனாளி அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டீ கணேசன் தலைமை தாங்கினார் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பதற்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ விலையில்லா அரிசி உடனே வழங்க வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் தொடர்ச்சியாகவும் நாலு மணிநேர வேலை மற்றும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து தங்கள் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைது