in

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆனி மாத திருக்கல்யாண உற்சவ விழா திரளான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆனி மாத திருக்கல்யாண உற்சவ விழா திரளான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ விசலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மூலவர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது

விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கோவில் மண்டபத்தில் நடந்தேறியது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் மனக்கோளத்தில் ஸ்ரீ விஸ்வநாதர் பிரியாவிடை அம்மன் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் ஸ்ரீ விநாயகப் பெருமான் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்கள் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளினார்கள் தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டன

பின்னர் பட்டு வஸ்திரம் பட்டு சாத்துதல் பூணல் அணிவித்தல் காப்பு கட்டு வைபவம் மற்றும் கன்னிகாதான பூஜைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பழங்கள் இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை சுவாமிக்கு சமர்ப்பித்தனர் இதனை அடுத்து யாக பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டன பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து வாரணம் ஆயிரம் பூஜைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வ திரு கல்யாணத்தை கண்டு வழிபாடு செய்தனர் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் மங்கல பொருட்கள் பிரசாதம் வழங்கப்பட்டது .

What do you think?

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழா மூன்றாம் திருநாள் அனுமந்த வாகனத்தில் பவனி வந்த கள்ளழகர்