புதுச்சேரி மங்களம் தொகுதியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் அரசின் மூலம் கிராமப்புற மக்களின் நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்ட பணி வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மங்களம் தொகுதிக்குட்பட்ட திருக்காஞ்சி கிராமத்தில் உள்ள தங்கலை 22 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவிலும் சாத்தமங்கலம் கிராமத்தில் ஏரியின் வடக்கு பகுதியில் 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிடும் பங்கூர் ஏரியின் தென் பகுதியில் 32 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவிலும் மங்களம் தாங்கலை 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவிலும் உருவையாறு ஏரியின் வடக்கு பகுதியை 18 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவிலும் கோட்டைமேடு சங்கராபரணி ஆற்றின் கரையை பலப்படுத்துவதற்காக 28 லட்சத்தி 10 பத்தாயிரம் ரூபாய் செலவிலும் முத்தம் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ராமன் இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்