in

முசிறி அருகே மேட்டுப்பாளையத்தில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்ததில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

முசிறி அருகே மேட்டுப்பாளையத்தில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்ததில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பாவடி தெரு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். மண்பாண்ட தொழில் மற்றும் டைலராக வேலை செய்து வருகிறார். இவரது குடிசை வீட்டில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது.

இந்த தீ மள மளவென பிடித்து வீடு முழுவதும் எரிந்து போனது. வீட்டில் பீரோவில் இருந்து வைத்திருந்த சுமார் மூன்று லட்சத்து 40 ஆயிரம் பணம், 10 பவுன் மதிப்பிலான தங்க நகைகள் வீட்டு பத்திரம் தையல் இயந்திரம், எம்பிராய்டிங் மெஷின், டி.வி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. தீ பற்றியதுமே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதேபோன்று இவரது வீட்டின் அருகே செல்வராஜ் என்பவரது கூரை வீட்டில் தீ பற்றி முற்றிலும் எரிந்து போனது. இது குறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி செய்தார். மேலும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டி தரப்படும் எனவும் ஆறுதல் கூறினார். மேட்டுப்பாளையம் ஸ்டார் குரூப்ஸ் இளைஞர் அமைப்பினர் அக்குடும்பத்தினருக்கு மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

மேலும் சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் விபத்து

உலக நலன் வேண்டி நாமக்கல் பரமத்தி அருகே பீமேஸ்வரர்சிவ ஆலயத்தில் ருத்ர ஹோமம்