in

மத்திய அரசின் உல்லாஸ் திட்டத்தை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

மத்திய அரசின் உல்லாஸ் திட்டத்தை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

 

புதுச்சேரியை 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் உல்லாஸ் திட்டத்தை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு…

புதுச்சேரி அரசு மாநில பயிற்சி மையம் மாநில எழுத்தறிவு இயக்கம்  சார்பில் உல்லாஸ் திட்டத்தின் முதல் கற்றல் மையத் திறப்பு விழா காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .

இதில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு  உல்லாஸ் கற்றல் மையத்தை திறந்து வைத்து தன்னார்வல ஆசிரியருக்கு அடையாள அட்டையும் கற்போருக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கினார் .

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம்….

உல்லாஸ் என்னும்  புதிய பாரத கல்வி அறிவு திட்டம் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கு கல்வியளித்து புதுச்சேரியை 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் உயர்ந்த குறிக்கோளோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

சிறு வயதில் பள்ளிப்படிப்பைத் தவறவிட்ட பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து கல்வி கற்கலாம் அந்தந்த ஊர்களில் உள்ள அரசு பள்ளிகள் இத்திட்டத்தின் கற்றல் மையங்களாக செயல்படும். என்றும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் எழுத்தறிவில்லாத பத்தாயிரம் முதியோர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க இந்த திட்டத்தின் மூலம் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

What do you think?

புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படும்

திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது