ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த
ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளை நோயால் அவதியுற்ற போது இங்கு கோவில் கொண்டுள்ள வைத்தியநாத சுவாமியை வழிபட்டு சூளை நோய் நீங்கப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் இங்கு நடைபெறும் பிரதோஷ பூஜை குறிப்பாக சனி பிரதோஷ பூஜையில் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்றனர்.
இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்று வந்தது நிறைவு நாளான இன்று மண்டல அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலையிலேயே உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆலோசனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மண்டலபிஷேக யாக சாலை பூஜையில் வேத விற்பனர்கள் புனித நீருக்கு மந்திர ஜெபங்களை ஜெபித்து தொடர்ந்து ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி ஸ்ரீ சிவகாமி அம்பாள் மூலவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இன்றைய மண்டல பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.