ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பிரசித்தி பெற்ற மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோயிலில் விஷேச பூஜைகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற ஏழுலோகநாயகி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கோயிலின் மூலவரான ஏழுலோகநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சாந்த சொரூபியாய் அம்மன் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்கிட மகா தீபாராதனை நடந்தது.
இதில் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பெண்கள் மாவிளக்கேற்றியும் எண்ணெய் தீபமேற்றியும் மனமுருகி வேண்டி வழிபாடு நடத்தினர்.