சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளை வயல் ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூலவர் காளியம்மனுக்கும் உற்சவர் அம்மனுக்கும் பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் சர்வ அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காளியம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.