தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….
கடந்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது, புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 22cm, கோயம்புத்தூரில் 7cm மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை தொண்டியில் 35.6 degree செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 19.4 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.
நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30-40km வேகத்தில் வீசக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரபகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.