செஞ்சி அடுத்த செத்தவரை கிராமத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவிலில் 48-வது நாள் மண்டல நிறைவு பூஜையில் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து சாமி வழிபாடு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செத்தவரை சிவஜோதி மோனோ சித்தர் பீடத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று 48 நாட்கள் தினம் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில்
இன்று 48 -வது நாள் மண்டல நிறைவு பூஜையில் நல்லான் பிள்ளை பெற்றால் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் சன்னிதானத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சிவ வாத்தியங்களுடன் பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி செத்தவரை சிவஜோதி மோனோ சித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் திருக்கோவிலிற்கு வந்தடைந்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களைக் கொண்டு சொக்கநாதர் சுவாமிக்கும், மீனாட்சி அம்மனுக்கும், ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனோ சித்தர் சுவாமிகள் பால் அபிஷேகம் செய்தார்.
பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சொக்கநாதர் சாமிக்கும், வெள்ளி கவசங்களால் பக்தர்களுக்கு காட்சியளித்த மீனாட்சி அம்மனுக்கும் மகா தீபாரதனை நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு சிவனடியார்களின் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு சிவன் துதி பாடல்களை பாடினார்.
இந்த 48-வது நாள் மண்டல நிறைவு பூஜையில் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.