in

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி நன்றி என வைத்திலிங்கம் எம்.பி.,தெரிவித்தார்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி நன்றி என வைத்திலிங்கம் எம்.பி.,தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி வாரியாக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

காட்டேரிகுப்பம் கிராமத்தில் துவங்கிய நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் கோவிலில் பூஜை செய்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்பொழுது பேசிய வைத்தியலிங்கம் எம்.பி.,இத்தொகுதியில் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை மீறி இண்டியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால், இத்தொகுதியில் ஏதேனும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் இருப்பின் உங்களுடன் ஒன்றிணைந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

பேச்சு.வைத்திலிங்கம் எம்பி

முன்னதாக நன்றி பிரசாரத்திற்கு வந்த வைத்தியலிங்கம் எம்பி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் அப்பகுதி பெண்கள் எங்கள் பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுங்கள் என முறையிட்டனர்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் ஏ.கே. குமார், காங்கிரஸ் வட்டார தலைவர் பரமசிவம், மாநில செயலாளர் சுரேஷ், முத்துரங்கம், தி.மு.க., நிர்வாகி செந்தில்வேலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

What do you think?

திருவெறும்பூரில் அமைந்துள்ள மலைக்கோயில் ஸ்ரீநறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

இருசக்கர வாகனத்தை திருடிய நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்