in

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குரல் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குரல் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது

பேச்சுரிமை எழுத்திறமைக்கு எதிராக சமஸ்கிருத பெயரில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மூன்று புதிய சட்டங்களையும் புதுச்சேரியில் அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி குரல் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் சாரம் ஜீவா சிலை அருகே நடைபெற்றது..

நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற குரல் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து வழக்கறிஞர் ப.பா மோகன் கூறும்போது…

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக சமஸ்கிருத மொழியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய சட்டங்களை சட்டங்களும் பேச்சு உரிமைக்கு எதிரானது இதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்..

What do you think?

இருசக்கர வாகனத்தை திருடிய நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்

சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது