in ,

காரியாபட்டி 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோயில் 1008 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

காரியாபட்டி அருகே உள்ள 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

16 அடி ஸ்ரீகபால காளியம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை,மஹா சங்கல்பம், புண்யாகாஷணம்,கலச பூஜை, ஜபம், பிரத்தியங்கிரா ஹோமம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், நடைபெற்றது.

பின்னர் இன்று காலை காரியாபட்டி சுப்பிரமணியர் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க பெண்கள் 1008 பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து பேருந்து. நிலையம், முக்குரோடு, செவல்பட்டி மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து 16-அடி ஸ்ரீகபால காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

இதில் சிவன், பெருமாள், அம்மன், காளியம்மன், கருப்பசாமி, மீனாட்சி, போன்ற வேடங்கள் அணிந்தும் குழந்தைகள் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த வருஷாபிஷேக விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கூடாது பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க கோரி பட்டாசு ஆலை ஊழியர்கள் மாறி மாறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு