in ,

இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா பட்டாபிஷேகம்

இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா பட்டாபிஷேகம்

 

இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் 20 – ஆம் ஸ்ரீ தர்மர் பட்டாபிஷேகம் என்னும் பொறை நிறை மன்னன் திருமுடி புனைதல் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழா 20 – ம் நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ தர்ம மகாராஜா, ஸ்ரீ சித்ராங்கை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தெய்வங்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து மின்விளக்களால் வழங்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்காமல் 65,000 கோடி அளவில் மின்சாரத்தை வெளியில் அரசு வாங்கியுள்ளது