in ,

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி திருவிளக்கு பூஜை

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி திருவிளக்கு பூஜை

 

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி திருவிளக்கு பூஜை ஏராளாமான பெண்கள் பங்கேற்ப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள புகழ்பெற்ற ஆலயமான அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு 23-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மோகனூர் காளியம்மன் ஆலய வளாகத்தில் நேற்று இரவு மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .அப்போது அலங்கரிக்கப்பட்ட உற்சவ காளியம்மன் முன்னே சிவாச்சாரியார்கள் கணபதி வழிபாட்டுடன் திருவிளக்கு பூஜையினை துவங்கி பல்வேறு வழிபாட்டு முறைகளை கூற பெண்கள் அந்த வழிபாட்டு முறையினை பெண்கள் செய்தனர்.

அப்போது திருவிளக்கு நிறைவாக அந்தந்த விளக்கிற்கு பெண்கள் மகா தீபம் காண்பித்த பின் கோவிலை சுற்றி வந்து காளியம்மனை வணங்கினர்.

அப்போது மூலவர் காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வருகை புரிந்து அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்காமல் 65,000 கோடி அளவில் மின்சாரத்தை வெளியில் அரசு வாங்கியுள்ளது

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை