கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்
திண்டிவனம் வட்டம் கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய இரத்தான முகாம் 23.07.2024 செவ்வாக்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மா. பேரா. செ. செந்தமிழ்ச்சோழன் வரவேற்புரை வீரமுத்து தலைமையேற்க, முதன்மை நிர்வாக அலுவலர் பேரா. ப. சிவக்குமார், நிர்வாக அலுவலர் முனைவர் செ. சிவா கருத்துரை வழங்கினர்.
மருத்துவர் இராமதாசு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுத்தலைவர் (ம) சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. க. மணி அவர்கள் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் S. தீபிகா, விழுப்புரம் பொது மருத்துவமனை மருத்துவர் T. விவேகானந்தன், திரு. M. தண்டபாணி நிர்வாக கமிட்டி உறுப்பினர். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். மருத்துவ குழுவினர் 86 மாணவர்களிடம் இருந்து 86 யூனிட் இரத்தம் சேகரித்தனர்.
நிறைவாக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாசிரியர் பேரா. மு. இராமு நன்றி கூறினார். திரு. ப. மருது உடற்கல்வி இயக்குநர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்தார்.
இதில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இது கல்லூரியில் நடைபெற்ற 25-வது குருதி குறிப்பிடத்தக்கது.