in ,

மேல்பேரடிகுப்பம் கல்கூத்து சந்திரகிரி ஸ்ரீ ஐயனாரப்பன் 36 ஆம் ஆண்டு திருவிழா திருக்கல்யாணம்

மேல்பேரடிகுப்பம் கல்கூத்து சந்திரகிரி ஸ்ரீ ஐயனாரப்பன் 36 ஆம் ஆண்டு திருவிழா திருக்கல்யாணம்

 

மேல்பேரடிகுப்பம் கிராமம் அருள்மிகு பூரணி பொற்கலை சமேத கல்கூத்து சந்திரகிரி ஸ்ரீ ஐயனாரப்பன் 36 ஆம் ஆண்டு திருவிழாவில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல்பேரடிகுப்பம் கிராமம் அருள்மிகு பூரணி பொற்க்கலை சமேத கல்கூத்து சந்திரகிரி ஐயனாரப்பன் 36 ஆம் ஆண்டு திருவிழாவில் குதிரை மேல் கரகம் ஜோடித்து வீதி உலா வந்து கோவிலை வந்து அடைந்தது. முன்னிட்டு வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூரணி பொற்க்கலை சமேத கல்கூத்து சந்திரகிரி ஐயனாரப்பன் மணமக்களாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

முன்னதாக தாம்பூலம் மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு பக்தர்களால் மணமக்கள் அழைப்பு சிறப்பாக கோயில் உட்பிரகாரத்தில் இருந்து மைய மண்டபத்திற்கு நடைபெற்றது. மேலும் விநாயகர் பூஜைவுடன் இனிதே தொடங்கியது. மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் கால்நடும் வைபத்துடன் மற்றும் கலச பூஜை, காப்பு கட்டும் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பூரணி பொற்கலை ஆகிய இரு தெய்வங்களுக்கு மங்கள நாண் அணிவிக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூரணி பொற்கலை சமேத கல்கூத்து சந்திரகிரி ஸ்ரீ ஐயனாரப்பன் மணக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் ஆரம்பிக்கப்பட்ட திருக்கல்யாணம் திருமாங்கல்யம் வைபவம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்

அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல்