அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல்
திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் என்னும் ஆடிப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் தஞ்சை மாரியம்மன் ஆக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மன் பச்சைவாழி அம்மனாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். மேலும் ஆலயத்தில் உள்ள புற்று வளாகத்திற்கு காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. மேலும் வண்ணவிளக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் இரவு வீதி உலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதில் நல்லியக்கோடன் நகர் மற்றும் J. P. நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.