திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி உண்டியில் காணிக்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை 3 கோடிகளை தாண்டியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் சிவனடியார்களை கொண்டு எண்ணப்பட்டது.
அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபத்தில் இன்று காலை உண்டியல்களில் வரும் காணிக்கையை எண்ணும் பணி துவங்கியது.
இதில் நிரந்தர உண்டியல்கள் 72ம் தற்காலிக உண்டியல்கள் 11ம் மொத்தம் 83 உண்டியல்கள் இருந்த நிலையில் உண்டியல்கள் எண்ணும் பணி துவங்கியது.
கோயில் இணைஆனையர் ஜோதி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மேற்பார்வையில் 300 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு நேரலை செய்யப்பட்டது.
இந்த ஆடி மாத பௌர்ணமி உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் போடப்பட்ட பணம்:3,46,69,341 3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 341 ரூபாய் மற்றும் தங்கம் 305 கிராம் வெள்ளி 1 கிலோ. 492 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டது.