in

கலைஞர் நூலகத்தை தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன் திறந்து வைத்தார்

கலைஞர் நூலகத்தை தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன் திறந்து வைத்தார்

 

திருக்குவளையில் நாகை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன் திறந்து வைத்தார்.

மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கலைஞர் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை கடைவீதியில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டேனியல் சத்யா முன்னிலையிலும் மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் பங்கேற்று கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் B.N.கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கலையரசன், சுரேஷ், பன்னீர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What do you think?

குழந்தையின் கைவிரலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இர்ஃபான்

நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது – டாக்டர் ராமதாஸ் பேட்டி