in ,

சனீஸ்வரர் பகவான் அருள் பாலிக்கும் திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்

சனீஸ்வரர் பகவான் அருள் பாலிக்கும் திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்

 

சனீஸ்வரர் பகவான் குடும்ப சமேதராய் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் இந்தியாவில் ஒரே தலமான கும்பகோணம் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது திருக்கோயிலில் சனீஸ்வரன் பகவான் மந்தாதேவி, ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி, குளிகன் என இரு மகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.

இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார்.

அதேபோல் ராமபிரானும் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளதாக தல வரலாறு
பல்வேறு சிறப்புடைய திருக்கோவிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி
மா பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பல்வேறு வகை வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி கொடுத்த சனி பகவானுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மதுரை தத்தனேரி மயான காளி ஆலயம் சங்கு ஊதி விளக்கேற்றி மனமுருக தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

பழனி திருக்கோயிலின் உண்டியல்கள் காணிக்கை வரவு ரூ.2.78 கோடியை தாண்டியது