பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் தேய்பிறை அஷ்டமியை சிறப்பு அபிஷேகம்
பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். இத் திருக்கோயில் பழமையும், வரலாற்று பெருமையும் கொண்டது. டச்சுக்காரா்களால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலிருந்து சண்முகா் சிலை எடுத்துச்செல்லப்பட்டது.
அதற்காக புதியதாக முருகன் சிலையானது எடுத்துச் செல்லும்போது அங்கு மூல விக்ரஹம் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று இத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் இந்த கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக கூறப்படுகிறது. மூலவா் ஸ்ரீ திாிபுராந்தீஸ்வரா் தனிச் சன்னதியில் அருள் பாலித்து வருகின்றாா். சுவாமிக்கு தென் பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றாா்.
மேலும் விநாயகா், ஸ்ரீ சுப்பிரமணியா், குரு தஷ்ணாமூா்த்தி, நவக்கிரஹங்கள் பைரவா் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
அதில் ஒரு நிகழ்வாக தனிச் சன்னதியில் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள பைரவருக்கு ஆடி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
மாலையில் முதலில் பைரவ ஹோமம் நடைபெற்றதை தொடா்ந்து மஞ்சள்பொடி, மாபொடி, வாசனைப்பொடி, பால், தயிா், விபூதி, பழவகைள், தேன் சந்தணம் கொண்டு ருத்ர ஜெபத்துடன் அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏரளமான பொதுமக்கள் ஆஸ்திக அன்பா்கள் இதில் கலந்துகொண்டு காலபைரவரை தாிசித்து சென்றனா்.