in ,

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு,பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் தங்க கவச உடையை அணிவித்து தொடர்ச்சியாக பல்வேறு வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறினார்.

அதைத்தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் என அமைச்சர் சாய் சரவணன் பேட்டி

பழனி மலைக்கோயிலில் ஆடிமாதம் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்