in

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது

 

மதுரை மாநகராட்சி மைய அலுவலக கட்டிடத்தில் இம்மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது

மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலையில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தின் தொடக்கமாக வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு மாமன்ற கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து காங். உறுப்பினர்கள் எதிர்ப்பு

மத்திய பட்ஜெட் பாரபட்சத்துடன் உள்ளதாக கூறி மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டி பட்ஜெட் உரை நகலை கிழித்து எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்த 62 வது வார்டு கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடந்தமுறை பிரச்சனை செய்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஆணையை பெற்றார்.

இந்நிலையில் மாமன்ற கூட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

What do you think?

நாகையில் 100க்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிரடியாக துண்டித்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா பதினாறு சக்கர சப்பரத்தில் வீதி உலா