ரசிகர்களுக்கு ஹெல்மெட் கொடுத்து ஹெல்மெட்டனியாமல் அபராதத்தை கட்டிய பிரசாந்த்
தனது படத்தின் ப்ரோமோஷ…னுக்கு ரசிகர்களுக்கு ஹெல்மெட்டை விநியோகம் செய்த நடிகர் ஹெல்மெட்டனியாமல் அபராதத்தை கட்டியிருக்கிறார்.
அண்மையில் தனது தந்தையின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனலில் பிஸியாக இருக்கும் பிரசாந்த்தை ஒரு யூடியூப் சேனல் பேட்டி எடுத்தனர்.
பேட்டி எடுக்கும் சேனலை சேர்ந்த பெண்ணை பைக்கின் பின்னால் அமர வைத்து கொண்டு பைக் ஓட்டிக்கொண்டே பிரஷாந்த் பேட்டி அளித்தார்.
பேட்டியளிக்கும் சந்தோஷத்தில் இருந்த பிரசாந்த் ஹெல்மெட் அணிய மறந்து சென்னை தியாகராய நகர் சாலையை சுற்றி சுற்றி பேட்டி அளித்தார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது எடுத்து ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக சென்னை போக்குவரத்து போலீசார் பிரசாந்த்..இக்கு ஆயிரம் ரூபாயும் பேட்டியளிக்க சென்ற பெண்ணுக்கு 1000 ரூபாயும் 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹெல்மெட்டை விநியோகித்த பிரசாந்துக்கு ஒரு ஹெல்மெட் அணியை தோன்றவில்லையா? பிறகு எதற்காக இவர் மற்றவர்களுக்கு ஹெல்மெட் கொடுத்தார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.