in

அரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருந்து பாஜக வெளியே வந்துவிடலாம் என அதிமுக அன்பழகன் பேட்டி


Watch – YouTube Click

பாஜக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுவது எல்லாம் பாஜக கருத்தாக இருந்தால் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருந்து பாஜக வெளியே வந்துவிடலாம் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அதிமுகவினர் வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் ரங்கசாமி இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதற்கு அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துகொள்வதாகவும், இருந்தாலும் இந்த பட்ஜெட் ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத ஒரு உரையாக இந்த பட்ஜெட் உரை உள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த முறையும் அறிவித்த திட்டங்களை இந்த ஆளும் பாஜக அரசு செயல்படுத்தாமல் உள்ளது. இதை கண்டித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. எனவே புதுச்சேரியில் எதிர்கட்சிகள் இல்லாத நிலை உள்ளது என்றார்.

மேலும், பாஜக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுவது எல்லாம் பாஜக கருத்தாக இருந்தால் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருந்து பாஜக வெளியே வந்துவிடலாம் என்றும், வெளியே வந்துவிட்டு இதுபோன்ற கருத்துகளை கூறினால் ஏற்புடையதாக இருக்கும். இல்லையென்றால் முதலமைச்சர் கோவமடைந்து அவர்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றலாம். ஆனால் இவை இரண்டும் நடக்காது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்


Watch – YouTube Click

What do you think?

நாகையில் உள்ள காப்பகத்தில் வார்டன் திட்டியதால் 15 வயதான 8 சிறுமிகள் மாயம் சென்னையில் மீட்பு

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02.08.2024)