பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news
கடந்த இரண்டரை வருடங்களாக உக்கிரன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா உலக நாடுகள் பலவற்றின் வெறுப்பை சம்பாதித்த போதிலும் தொடர்ந்து உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. ஆனாலும் உக்கிரைன் ரஷ்யாவுடன் போரில் தோற்காமல் தாக்கு பிடித்து வருகிறது . நேற்று உக்கிரைன் தலைநகரம் மீது ரஷ்யா 90 ட்ரோன் ..களை கொண்டு வான் வழி தாக்குதல் நடத்திய பொழுது அவற்றை உக்கிரைன் பாதுகாப்பு படை அழித்து. தற்பொழுது நெதர்லாந்திடமிருந்து உக்கிரேன் ஆறு போர் விமானங்களையும் டென்மார்க்கிடமிருந்து ஆறு போர் விமானங்களையும் பெற்று தனது படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், குழந்தைகள் நடன வகுப்பில் நடந்த பயங்கரமான கத்தி குத்து சம்பவத்தால் பல நகரங்களில் அமைதியின்மை ஏற்பட ” சிறுபான்மையினரே காரணம் என்று கண்டனம் செய்தார் .இதற்கு காரனமானவர்களின் மேல் நடவடிக்கை எடுபதாக உறுதியளித்தார். கடுமையான மோதல்களுக்கும் போராடத்திற்கும் தவறான தகவல்லே காரணம் என்று குற்றம் சாட்டினார்
ஜூலை 29 திங்கட்கிழமை அன்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினர்கள் காமன்வெல்த் பாராளுமன்ற சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (நிலை) மசோதாவின் முக்கிய நோக்கங்களைப் பற்றி விவாதித்தனர். மசோதாவின் நோக்கம் CPA மற்றும் ICRC இல் மறுவரையறை செய்வதாகும், இதன் மூலம் UK இன் பிற சர்வதேச அமைப்புகளைப் போலவே அரசாங்கம் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் விலக்குகளை வழங்க முடியும்
இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி, அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு கண்ணீருடன் வளையத்தை விட்டு வெளியேறினார்.
பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பந்தயத்தில் நீச்சல் வீராங்கனை தமரா பொடோக்கா சரிந்து விழுந்தார்.
நீச்சல் ஜாம்பவான் கேட்டி லெடெக்கி, பெண்களுக்கான 4 x 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடர் ஓட்டத்தில் தனது 13வது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றார்.