விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முருக்கேரியில் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருக்கேரியில் உள்ள வேங்கடத்தம்மன், மாரியம்மன், நாகாத்தம்மன் கோவில் திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 04ம் தேதி காலை நாகாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூங்கரகம் வீதியுலாவும், கூழ்வார்த்தலும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வேங்கடத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 9:00 மணிக்கு திருத்தேர் இழுத்தலும் நடந்தது. பக்தர்கள் வேல், அலகு, செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 7 மணி அளவில் பக்தர்கள் தீ மிதித்தனர், பூ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் தேர் திருவிழாவை காண முருக்கேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்