நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – யாக சாலை முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்றுமகாமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற 8 – 9 – 2024 ஞாயிருக்கிழமை காலை 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள் மிக விமர்சையாக நடைபெறுவதை முன்னிட்டு கோவில் வளாகம் முன் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது பாக்கு மரத்திற்கு சிறப்பு பூஜை காப்பு கட்டிய பிறகு கற்புற மஹா தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு கைதாங்கலாக காப்பு கட்டிய பாக்கு மரத்தை திருக்கோவில் சுற்றி வந்து கோவில் வளாகம் முன் யாகசாலை அமைக்க வைக்கப்பட்ட குழியில் பால், தீர்த்தம் ஊற்றி பின் வேத மந்திரம் முழங்க ஊன்றப்ப்பட்டன. பின் பாக்குமரக் கம்பத்திற்கு பால், நவதாண்யம் போடப்பட்டு சிவாச்சாரியார்கள் மஹா தீபம் காண்பித்தனர். பின் உற்சவ மாரியம்மனுக்கு மஹா தீபம் பின் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்