நெல்லை அருகே 75 இலட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியது – 4 பேர் கைது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீசார் தாழைகுளம் விலக்கு அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அபபொழுது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் வந்தவர்களிடம் துருவித் துருவி சோதனை இட்டனர். அதில் 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது .
இதனை அடுத்து வாகனத்தில் கள்ள நோட்டுகளுடன் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி , கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவிலைச் சார்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4பேர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .
மேலும் அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள் ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.