in

புதுச்சேரி மெரினா கடற்கரையில் ஓட்டகம்- குதிரைகளை பயன்படுத்த தடை

புதுச்சேரி மெரினா கடற்கரையில் ஓட்டகம்- குதிரைகளை பயன்படுத்த தடை

 

புதுச்சேரி மெரினா கடற்கரையில் பொழுது போக்கிற்காக ஓட்டகம்-குதிரைகளை இன்று முதல் பயன்படுத்த நகராட்சி தடை. ஒட்டகசவாரியில் ஈடுபட்டிருந்த 13 வயது ஒட்டகம் உயிரிழந்ததால் நடவடிக்கை

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா என்ற பெயரில் கடற்கரையில் பொழுதுபோக்கு மையத்தில் இயங்கி வருகிறது.

இங்கு குழந்தைகளை மகிழ்விக்க ஒட்டக சவாரி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜுலை மாதம் (19 ம் தேதி) அன்று 13 வயது ஒட்டகம் திடீரென உயிரிழந்தது. இதனை கடற்கரை வளாகத்தில் ஓட்டகம் பராமரிப்பாளர் கார்த்திக், ஜோஸ் ஆகியோர் ஏற்பாட்டின் படி புதைக்கப்பட்டது.

இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜெவின் ஒதியன்சாலை கா26 தேதி வல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜுலை மாதம் தாசில்தார் பிருத்வ் தலைமையில் காவல் துறை பாதுகாப்புடன் கால்நடை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுக்கப்பட்டது.

அப்பொழுது அங்கிருந்த தனியார் கால்நடை மருத்துவர் கிட்னி பாதிப்பு காரணமாக ஒட்டகம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையை காண்பித்தார். இதனை கால்நடைத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டாலும் விலங்கு நல ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை இறந்த பொழுது வெளிமாநிலத்தில் இருந்து வந்து பிரேத பரிசோதனை செய்தது போல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசின் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் கால்நடை துறை மருத்துவர்களும் இணைந்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதாக உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜுலை மாதம் 30 தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பாகவே. மெரினா கடற்கரையில் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்ட ஒட்டகம் மற்றும் குதிரையை இன்று முதல் தடை செய்யப்படுவதாக நகராட்சி அறிவிப்பு தெரிவித்துள்ளது…

What do you think?

புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையில் மூன்று பேர் ஓடையில் அடித்து செல்லப்பட்டனர்

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை