in

நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் 


Watch – YouTube Click

நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் 

 

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சமந்தாவை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அண்மை காலமாக சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் இல் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் தகவல் கசிந்த நிலையிலும் இருவரும் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்று கூறி தங்களுக்குள் இருக்கும் காதலை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தவில்லை.

திடீரென்று நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை நாகார்ஜுன இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

இவர்களுக்கு ஒரு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் நாகேஸ்வரராவின் குடும்பத்தில இப்படி நடக்கிறதே என்று கமெண்ட்ஸ் செய்கிறார்கள் நாகேஸ்வரராவ் கடைசி வரை தன் மனைவியுடனே வாழ்ந்து வந்தார்.

ஆனால் அவரின் மகன் நாகார்ஜுனா முதன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்தார்.

அதேபோல நாக சைதன்யாவும் சமந்தா…வை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சோபிதா… வை திருமணம் செய்கிறார் என்று நெகடிவ் Comments வந்த வண்ணம் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

நடிகை சித்ரா வழக்கில் ஹேமநாத் விடுதலை

கடலூரில் ஸ்ரீமத் உடையவர் சபா முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு