in

செல்லிப்பட்டு படுகை அணையில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை

செல்லிப்பட்டு படுகை அணையில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை

 

மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க செல்லிப்பட்டு படுகை அனையை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் குடிநீர் ஆதாரத்திற்காகவும் விவசாயம் செய்ய வசதியாக 1906-ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு பகுதியில் படுகை அணை கட்டப்பட்டது.

இந்த படுகை அணையில் மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பயன்பாட்டிற்காகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது.

இந்த அணை பராமரிப்பின்றி இருந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு பழுதடைந்தது, அந்த அணையை படுகை அணையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கையும் விடப்பட்டது.

ஆனால் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை மேலும் பழுதை சரி செய்வதற்கு பதிலாக மணல் மூட்டைகள் அடுக்கி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

இருந்தாலும் மழை நீர் தேங்காமல் வீணாக கடலில் கலந்ததால் தொடர்ந்து விவசாயிகள் செல்லி பட்டு படுகை அணையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து 10-ஆண்டுகளுக்கு பிறகு 2021-ம் ஆண்டு செல்லிப்பட்டு படுகை அணையை புதிதாக கட்டுவதற்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டது.

ஆனால் ஒப்பந்தங்கள் விடப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை படுகை அணை சரி செய்யப்படவில்லை.

கடந்த இரண்டு நாட்களில் புதுச்சேரியில் சுமார் 24 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் செல்லிப்பட்டு படுகை அணையில் நீர் தேங்காமல் அனைத்து மழைநீரும் கடலில் கலந்து வீணானது.

மேலும் விவசாயம் செய்ய முடியாமலும் குடிநீர் ஆதாரமாக இல்லாமலும் பொதுமக்கள் அவதி அடைவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உடனடியாக வருகின்ற நேரங்களில் மழை காலம் வருவதால் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் செல்லிப்பட்டு படுகை அனையை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

வீடுகள் தோறும் தேசியக்கொடி போலீசார் தேசியக் கொடியுடன் புதுச்சேரி நகர வீதிகளில் அணிவகுப்பு.

1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் கடும் அவதி