நடத்துனரின் கனிவான பேச்சு ஆச்சரியப்படும் பேருந்து பயணிகள்
நடத்துனரின் கனிவான பேச்சு பயணிகளிடையே தொடர்ந்து பெருகிவரும் வரவேற்பு அரசு பேருந்தில் இப்படியும் ஒரு நடத்துனரா ஆச்சரியப்படும் பேருந்து பயணிகள்
கோவையில் இருந்து மதுரை . மருமார்கமாக மதுரையிலிருந்து கோவை என இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் குளிரூட்டப்பட்ட பேருந்தில் நடத்துனருடைய செயல் தற்போது பயணிகளிடையே வெகுவாக பாராட்டுதலை பெற்று வருகிறது.
நடத்துனருடைய செயல்பாடுகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த பயணி ஒருவருடைய காட்சி தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆம் மதுரையில் இருந்து கோவை நோக்கி புறப்பட்ட அந்த குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஆரப்பாளையம் பேருந்து விட்டு பேருந்து மெல்ல நகர்ந்தவுடன்.
ஓட்டுனர் கருகி நின்ற நடத்துனர் சட்டென்று தனது கையில் மைக்கை பிடித்தவர் பேசத் தொடங்குகிறார்..
அவர் பேசி முடித்தவுடன் மகிழ்ச்சியோடு பேருந்து பயணிகள் கைதட்டல் சத்தம் தொடர்ந்து இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேருந்து பயணத்தை தேர்ந்தெடுத்த உங்களுக்கு எனது நன்றி.
நமது அரசு நமக்காக ஒரு அழகான பேருந்தை வழங்கி இருக்கிறது அதிலும் குளிரூட்டப்பட்ட பேருந்து.
இந்த நிலையில் உங்கள் பயணம் இனிதாக சௌகரியமாக அமைய எங்களது வாழ்த்துக்கள்.
பயணத்தின் போது நீங்கள் பயணம் செய்யக்கூடிய இந்த பேருந்து சேதப்படுத்தாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் குறிப்பாக வாந்தி வருவது போல தோன்றினால் என்னிடம் புளிப்பு மிட்டாய் இருக்கிறது பிளாஸ்டிக் கவரும் வைத்திருக்கின்றேன் அதில் வாந்தி எடுத்துக் கொள்ளலாம் நீங்கள் பேருந்தில் வாந்தி எடுக்க வேண்டாம்.
நீங்கள் பயன்படுத்தி விட்ட பொருட்களை குப்பையாக பேருந்து போட வேண்டாம் நீங்கள் கீழே இறங்கும்போது நான் வைத்திருக்கும் படிக்கட்டில் இருக்கிறது அதில் விட்டு விட்டுச் செல்லுங்கள் பேருந்து சுத்தமாக பயன்படுத்துவோம்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து வரிசையாக எந்தெந்த நிறுத்தங்களின் நிற்கும் எவ்வளவு ரூபாய் என்பதையும் தெளிவாக குறிப்பிடுகிறார்.
அதேபோன்று ஓட்டுநர் பெயரை குறிப்பிட்டதோடு தன்னுடைய பெயரையும் குறிப்பிட்டு உங்களுடன் பயணம் செய்ய உங்கள் பயணம் இனிதாக எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி என்றும் ஓட்டுநர் நடேசன் மற்றும் நடத்துனர் சிவ சண்முகம் ஆகிய எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி என அவர் கூறி முடிக்க பயணிகள் உற்சாகமாக கைதட்டுவதோடு அந்த காட்சி நிறைவடைகிறது.
அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்னரே நடத்துனரின் இந்த கனிவான பேச்சு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.