in

புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி அரசு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

திமுக கொண்டு வந்த தீர்மானம் அரசு தீர்மானமாக மாற்றி நிறைவேற்றம்….

புதுச்சேரியில் கடந்த 31ஆம் தேதி துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொகை இன்றுடன் நிறைவு பெற்றது.

பேரவையில் இன்று கேள்வி பதிலை தொடர்ந்து தனி நபர் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. புதுச்சேரிக்கு மாநில அரசு வழங்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், செந்தில்குமார்,

சுயேட்சு உறுப்பினர் நேரு ஆகியோர் கொடுத்தனர். புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை பேசினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரெஞ்சுக்காரர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முதல் மத்திய அரசின் உள்துறையால் ஆளப்படுகின்ற பகுதியாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் யூனியன் பிரதேசங்களாக திகழ்ந்து வந்த கோவா, சண்டிகர் உள்ளிட்டவை இன்றைக்கு மாநில தகுதி பெற்று நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைத்தால் மக்கள் எதிர்பார்க்கின்ற வளர்ச்சியை அடைய முடியும் என்ற நோக்கோடு பல ஆண்டு காலமாக பல்வேறு ஆட்சிகள் நடைபெற்ற போதும் பல முறை ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு இப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 1972ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி தற்போது வரை 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு 15 முறை தீர்மானம் நிறைவேற்றம் செய்து மத்திய அரசின் கவனத்திற்கு அனுப்பிய நிலையில் அத்தீர்மானத்தை பரிசீலித்து குழு ஏதும் அமைக்காமல், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்து உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநில உரிமைக்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றும் இந்த சட்டமன்றத்தின் மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரையில் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர்…

இதை நிறைவேற்றினால்…

உயர்நீதிமன்ற கிளை அமைக்கும் வாய்ப்பு,ஒன்றிய நிதிக்குழுவில் இணைய முடியும் அதன் மூலம் ரூ. 4.500 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்தியா உலக அளவில் வாங்கும் கடன் பகுதியில் ஒரு பகுதி நமது மாநிலத்திற்கு வரும், நிர்வாகத்தில் உள்ள அனைத்து பதவிகளையும் நாமே நிரப்பிக் கொள்ளவும், அதற்காக தனி தேர்வாணையம் துவக்க முடியம், தனியாக திட்டக்குழு அமைக்கப்படும்,இடஒதுக்கீடு நாமே முடிவு செய்ய முடியும், தொழில் கொள்கை வகுத்து மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும், மின்துறை, துறைமுகம் இதுபோன்ற மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் நாமே முடிவு எடுக்க முடியும்,வரவு–செலவு திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அனுமதிக்கு காத்துக்கிடக்காமல் நாமே முடிவு செய்ய முடியும்.உண்மையான ஜனநாயகம் தழைக்க இது வழிவகுக்கும்

இது போன்ற மாநில வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாநில அந்தஸ்து தேவைப்படுகிறது என திமுக வலியுறுத்தியது….

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை முழுமையாக ஏற்று முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மிக முக்கியமான ஒன்று மாநில அந்தஸ்தை பெறுவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகத்தை சந்தித்து நேரில் வலியுறுத்தப்படும். மேலும் நமக்கு ஆதரவாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து நாடாளுமன்றத்தில் பேசி பெற்றுத் தருவதற்காக வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் பேரவையில் தீர்மானம் புதுச்சேரி சட்டமன்றத்தில் ஏகப்பட்டதாக நிறைவேற்றப்பட்டது.

What do you think?

மழை நீரில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகும் நிலை விவசாயிகள் வேதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து