இலங்கை சிங்களவர்களின் கார்ப்பரேட் நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து, தஞ்சையில் உள்ள இலங்கை சிங்களவர்களின் கார்ப்பரேட் நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விடுதலை தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் தடையை மீறி சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி குதித்து பர்னிச்சர் கடைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொலை செய்வதை கண்டித்தும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி.
தஞ்சை வல்லம் சாலையில் உள்ள இலங்கை சிங்களவர்களின் கார்பரேட் நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் நிறுவனத்தை இழுத்து மூட கோரி விடுதலை தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தம்ரோ பர்னிச்சர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்களில் சிலர் சாலை தடுப்புச்சுவரில் ஏறி குதித்து கடைக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடையை மூட செய்த காவல் துறையினர் கடை முன்பு பாதுகாப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர்.