தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்த குஷ்பூ
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எங்கு பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது அதனால் கட்சியினுடைய எந்த நிகழ்ச்சியிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
எனக்கு அரசியலில் தான் ஆர்வம் அதிகம் பாரதிய ஜனதா கட்சிக்காக பணியாற்றுவதில் தான் எனக்கு முழு திருப்தி கட்சி எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
நான் தான் முழு மனதுடன் ராஜினாமா செய்தேன் இனிமேல் நான் கட்சிக்காக இறங்கி வேலை செய்வேன் இப்பொழுதுதான் திமுகவினருக்கு என் மீது பயம் வந்துள்ளது.
இனிமேல் தான் என் விளையாட்டு ஆரம்பம் ஆகிறது.
இனிமேல் திமுகவை எதிர்த்து நான் தைரியமாக பேசுவேன் என்று நடிகை குஷ்பு பொடி வைத்து பேசியுள்ளார்.