பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மாரத்தான் ஓட்ட போட்டி
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என வலியுறுத்தி மாரத்தான் ஓட்ட போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம் என்கிற நோக்கில் மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது சாய் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த ஓட்ட போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சாய் விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான் ஒட்ட போட்டி, தருமபுர ரோடு மூங்கில் தோட்டம் வழியாக 5- கி.மீ தூரம் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது.
ஓட்ட போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 100 -க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும், குழந்தைகள் கலந்து கொண்டனர்.