in ,

மேலமங்கைநல்லூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

மேலமங்கைநல்லூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலமங்கையநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த ஆறாம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கியது தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தது.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு ரசித்தனர்.

What do you think?

இதய நோயாளி மூத்த குடிமகனிடம் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதம்

2 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதம்