in

திருவாரூரில் பலத்த சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர்

திருவாரூரில் பலத்த சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர்

 

திருவாரூரில் பலத்த சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர் , அருகே உள்ள குளத்தில் பேருந்து விழாமல் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு . பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் அச்சம்.

திருவாரூரில் இருந்து ஏ 16 என்ற அரசு பேருந்து கங்களாஞ்சேரி, செல்வபுரம், ஆனைகுப்பம், வழியாக பல்வேறு கிராமங்களை கடந்து நன்னிலம் செல்கிறது. இந்த பேருந்தில் வேலை முடிந்து தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் இன்று இரவு பயணம் மேற்கொண்டனர்.

பெண்கள் இலவசமாக பயணிக்கும் இந்த பேருந்து தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் நோக்கி சென்ற அந்த பேருந்து திருவாரூர் கமலாலய குளம் அருகில் வந்தபோது அரசு பேருந்தின் முன் பக்க டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் பேருந்து அருகே உள்ள கமலாலய குளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டது.

அரசு பேருந்தின் ஓட்டுனர் சாமர்த்தியமாக  செயல்பட்டு சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்தில் இருந்த மாணவ மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் உடனடியாக பேருந்திலிருந்து இறங்கினர்.

இந்த கிராமங்கள் வழியே செல்லும் ஒரே பேருந்து இது என்பதால் பயணிகள் மாற்று பேருந்துக்காக காத்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் மாற்று பேருந்து வராததால் வேறு ஒரு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

அரசு பேருந்து மிகவும் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தபோதிலும், பல்வேறு கிராமங்கள் வழியாக செல்வதால் ஆபத்தான முறையில் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதே பேருந்து கடந்த மாதம் 23ஆம் தேதி நடு வழியில் டயர் வெடித்து நின்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு மாதத்திற்கு உள்ளே இரண்டாவது முறையாக அரசு பேருந்து பழுதடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ஒரு மகத்தான பயணமாக இருக்கும் அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவாரூரில் பேட்டி