மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வெள்ளித்தேர் உற்சவம்
மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து மகாதீபாரதனை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன. தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வந்து வெள்ளித்தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து மலை மேல் வலம் வந்து அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.மேலும் குறிப்பாக ஆவணி மாதம் கிருத்திகை நட்சத்திரம் நாளன்று ஒளி கிரகமான சூரியன் தமது சொந்த ராசி வீடானா சிம்மம் ராசியில் ஆட்சி மற்றும் மூலதிரிகோண வீட்டில் வலுபெற்று இருப்பார்.
அதே போல இன்னொரு ஒளி கிரகமான சந்திரன் தமது உச்ச மற்றும் மூலதிரிகோண வீடான ரிஷபம் ராசியில் உச்சம் பெற்று வலுவாக இருப்பார்.
எனவே இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் ஜாதகருக்கு அதிகபட்ச நன்மை தரும். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20 ஆம் பட்டம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவனான பாலய சுவாமிகள் மற்றும் ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.