in ,

திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உரியடி திருவிழா

திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உரியடி திருவிழா

 

திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி 22-ம் ஆண்டு உரியடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூதேரி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி வெண்ணை சாப்பிடுவது போல் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ வேணுகோபாலசாமிக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஆன மின் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு கொண்ட சிலம்பாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் சிறுவர் மற்றும் சிறுமியர் ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ராதை வேடத்தில் நாட்டிய நிகழ்ச்சியுடன் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வெள்ளித்தேர் உற்சவம்

மயிலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரமண்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.