அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றானதும் தட்சனை சம்காரம் செய்து, வீரபத்திரர் அவதரித்த திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை மற்றும், மகா ருத்ர யாகம் நடைபெற்றது பக்தர்கள் திரளாக பங்கேற்க தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலை அடுத்த திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் அமைந்துள்ளது. இங்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
சிவனுக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்த தட்சனின் யாகத்தை அழித்து வீரபத்திரர் அவதரித்த இடமாகும். சிவபெருமான் திருவிளையாடல் குறித்த அஷ்ட வீரத்த தளங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் வேண்டியதை கொடுக்கும் சமஹன் எனப்படும் மந்திரம் பிறந்த ஸ்தலமாக போற்றப்படுகிறது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கிய நடைபெற்று வருகின்றன. இன்று நான்காவது கால யாகசாலை பூஜைகள் மற்றும் மகாபூர்ணாகுதி நடைபெற்றது.
தொடர்ந்து 121 வேத விற்பன்னர்களைக் கொண்டு 14631 முறை ருத்ர பாராயணம் செய்து ஆகுதி அளிக்கும் மகா ருத்ர அபிஷேகத்திற்கான யாகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். வேண்டிய வரம் தரும் ஆலய கும்பாபிஷேகத்தில் பெருந்திரளாக பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆதீன குரு மகா சன்னிதானம் கேட்டுக் கொண்டுள்ளார்.