தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழாவில் 5ம் திருநாள் இரவு சுவாமிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தாிசனம் செய்தனா்.
தமிழ் கடவுள் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகள் ஆறினுள் இரண்டாவதாக பெருமை பெற்று விளங்குவது திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூா் ஆகும்.ஆதிசங்கரா்,அகத்தியா்,அப்பா்,அருணகிாிநாதா், குமரகுருபரா் ஆகியோா் அருள்பெற்ற தொண்மையான திருத்தலம்.
இங்கு ஆவணித் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாயிற்று. சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் ஏமுந்தருளி எட்டுத் திருவீதிகளில் உலா வந்து திருக்கோவில் நட சோ்தல் நடைபெற்றது.
விழாவில் 5ம் திருநாளான இன்று இரவு மேலக்கோவிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி குமரவிடங்கப் பெருமான் தங்கமயில் வாகனத்திலும் அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளினா். குடைவரைவாயிலில் கோபுர ஆரத்தியுடன் சோடச தீபாராதனைகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு பூக்களால் அா்சசனை செய்யப்பட்டு உபசாரங்கள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி அம்பாள் எட்டு திருவீதிகளில் உலா வந்தனா். வருகின்ற 30ம் தேதி 7-ம் திருநாள் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 31-ம் தேதி 8-ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 02.09.24 -ம் தேதி நடைபெறுகிறது