in

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனி செயலரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏ


Watch – YouTube Click

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனி செயலரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏ

 

யார்ரா… நீ என்ன வெளியே போ இன்னு சொல்றதுக்கு இது என்ன உன் ஆயா வீட்டு சொத்தா….தேவையில்லாத வேலையெல்லாம் பாத்தா தூக்கி போட்டு மிதிச்சிடுவேன் இதாங் கடைசி ஒழுங்கா இல்லைனா ஒழிச்சிக்கடடிடுவேன்….

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனி செயலரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆளுங்கட்சி எம்எல்ஏ…

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ. கே. டி. ஆறுமுகம் இவர் அரசு கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் இந்திரா நகரான தன்னுடைய தொகுதி சார்ந்த நலத்திட்டங்கள் அனைத்தும் தன்னிச்சையாக முடிவுசெய்து பயனாளிகளுக்கு கொடுத்து வருவதாக முதலமைச்சரின் தனி செயலாளரான அமுதன் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது.தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் இருக்கும் போது நீங்கள் ஏன் நலத்திட்டங்களை தன்னிச்சையாக கொடுத்து வருகிறீர்கள் என கேட்டு அவரிடம் எம்எல்ஏ ஆறுமுகம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

அப்பொழுது சட்டமன்ற உறுப்பினரை பார்த்து வெளியே போ என்று முதலமைச்சரின் தனி செயலர் சொல்ல..என்னை யார்ரா நீ வெளியே போ என்று சொல்றதுக்கு இது என்ன ஆயா வீட்டு சொத்தா அவங் அவங் கோடி கோடியாய் செலவு செய்திட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கோம் ஏ.சி ரூமில் உட்கார்ந்து கிட்டு வேலை காட்டுறியா….

இப்படியே போனால் தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்… நீ என்ன சி.எம்… ஆ இல்ல அதுக்கு மேலயா ஒழுங்கா இருக்கணும் இல்லன்னா ஒழிச்சி கட்டிவிடுவேன் என்று முதலமைச்சரின் தனி செயலரை ஆறுமுகம் எம்எல்ஏ லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும் கூச்சல் குழப்பமே நிலவியது…

ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு முன்பு ஏ. கே. டி. ஆறுமுகத்தின் காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அனுமதி தராமல் இழுத்து அடித்ததாக புகார் இருந்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அமெரிக்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு